banner1

மலேசியாவில் தமிழ்க் கல்வி 200 ஆண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி , வரும் அக்டோபர் 20 – 23 வரையில், கெடா மாநிலத்திலுள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் ‘தமிழாசிரியர் மாநாடு 2016’ சிறப்பாக நடைபெறவுள்ளது. அதனையொட்டி, மலேசியத் தமிழாசிரியர்களின் ஆளுமையை வெளிக்கொணரவும் வருங்காலத்தில் ஆவணமாகவும் இருக்கும் எண்ணத்தில் தமிழாசிரியர்களுக்கான ‘ 2 நிமிடக் காணொலிப் போட்டி 2016’ நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்துகொள்பவர் தற்போது தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக இருத்தல் அவசியம். அரசு பாலர்ப்பள்ளி ( Prasekolah Kebangsaan ),தேசிய வகை தொடக்கத் தமிழ்ப்பள்ளி  [ SJK(Tamil )] தேசியப்பள்ளி [ Sekolah Kebangsaan] தேசிய இடைநிலைப்பள்ளி [ Sekolah Menengah Kebangsaan] சார்ந்த தமிழாசிரியர் வயது கட்டுப்பாடு இன்றி கலந்து கொள்ளலாம். போட்டிக்கு அனுப்பப்படும் காணொலி பின்வரும் தலைப்புகளை ஒட்டி இருத்தல் வேண்டும்:

  1.  என் தமிழாசிரியர் பணி
  2.  நான் ஒரு  தமிழாசிரியர்
  3. மகிழ்ச்சிமிகு தமிழ்ப்பணி
  4. நான் செதுக்கிய சிற்பங்கள்
  5. மாண்புக்குரிய தமிழாசிரியர்

காணொலி 2 நிமிடங்கள் (120 வினாடிகள்) அல்லது அதற்கு மேற்போகாத நேரத்தில் தமிழாசிரியர் தம் கருத்துகளை நல்ல தமிழில் பேச வேண்டும். காணொலியைத் தங்கள் ஆக்கச்சிந்தனைக்கு ஏற்ப படங்கள், காட்சிகள், இசை போன்றவற்றை இணைக்கலாம்.

போட்டிக்கான காணொலியைக் கீழ்க்காணும் மின் அஞ்சலுக்கு அக்டோபர் 14-க்குள் (14.10.2016-வெள்ளிக்கிழமை)அனுப்பி வைக்க  வேண்டும். நுழைப்படிவத்தைப் பெற கீழ்க்காணும் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளவும்.

போட்டியில் பங்குகொள்ளும் ஆசிரியரின் முழுப் பெயர்,அடையாள அட்டை எண் பணியாற்றும் பள்ளி, தொடர்பு எண் அனைத்தும் மின்னஞ்சல் வழி அனுப்பவும்.

மேல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்க : 0197211065 (Mr.L.Vasudevan) /0196736607 (Dr.R.Kumaravelu). தேர்வு பெற்ற சிறந்த காணொலிகளுக்கு பரிசுகளும் மலேசியக் கல்வி அமைச்சின் நற்சான்றிதழ்களும் வழங்கப்படும்.