Header Image

நோக்கம்

தமிழ்க்கல்வி.மலேசியா இணையத்தளத்தின் நோக்கங்கள் பின்வருமாறு:-

அ. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பான தகவல்கள், செய்திகள், விவரங்கள் ஆகியவற்றை வழங்குதல்.

ஆ. தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடக் கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான கலைத்திட்டம், பாடப்பொருள்கள், கற்றல் மூலங்கள் ஆகியவற்றை வழங்குதல்.

இ. இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடக் கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான கலைத்திட்டம், பாடப்பொருள்கள், கற்றல் மூலங்கள் ஆகியவற்றை வழங்குதல்.

ஈ. தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களிடையே அறிவார்ந்த பகிர்வுகளுக்கான (Knowledge Sharing) மெய்நிகர் சூழலை ஏற்படுத்தித் தருதல்.

உ. தமிழ்க்கல்வி தொடர்பான செயற்பாடுகள், நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள், திட்டங்கள், தகவல்கள், தரவுகள், விவரங்கள் வழங்கும்  தகவல் தளமாகவும் மூலகமாகவும் செயல்படுதல்.

ஊ. ஆய்வு மேம்பாட்டுப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி மெய்நிகர் சூழலில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறுதுணையாகச் செயல்படுதல்.