cymera_20161020_090352

மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு எயிம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது. இன்று பிற்பகல் தொடங்கி பேராளர்களாகக் கலந்துகொள்ளும் மலேசியத் தமிழாசிரியர்களும் வெளிநாட்டுப் பேராளர்களும் வருகைதர தொடங்கிவிட்டனர். முதற்கட்டமாகப் பதிவு நடவடிக்கைகள் நன்முறையில் நடைபெற்று முடிந்துவிட்டன. இன்று இரவு மணி 8:00க்கு அறிமுக நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்க இருக்கின்றது.

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு தொடர்பான சில சுருக்கக் குறிப்புகள் பின்வருமாறு:-

  • மாநாட்டு நாள் :
    • 20 -23 அக்டோபர் 2016 (4 நாள்கள்)
  • தலைமை :
    • மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் (கல்வித் துணையமைச்சர்)
  • திறப்பாளர் :
    • மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மாட்சீர் காலிட் (கல்வி அமைச்சர்)
  • சிறப்பு வருகை:
    • மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் (சுகாதார அமைச்சர்)
  • சிறப்பு விருந்தினர் :
    • மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு அவர்கள்
  • மலேசியப் பேராளர்கள் :
    • 200 தமிழாசிரியர்கள் 50 கல்வி அமைச்சு தமிழ் அதிகாரிகள்
  • வெளிநாட்டுப் பேராளர்கள் :
    • 50 பேர்
  • கலந்துகொள்ளும் நாடுகள் :
    • சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரான்சு, சுவிசர்லாந்து, மியான்மார், தாய்லாந்து, மொரிசியஸ், ஆஸ்திரேலியா
  • பொது அமர்வுகள் :
    • 1. 21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி
    • 2.இன்றைய தமிழ்க் கலைத்திட்ட திட்டமிடல்
    • 21ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கற்றல் கற்பித்தல்
    • தமிழ்க் கல்வியில் மதிப்பீடு
  • கட்டுரைப் படைப்பு : 24 தமிழாசிரியர்களின் ஆய்வுக் கட்டுரை படைக்கப்படும்
தஞ்சைப் பல்கலைக்க்ழக துணை வேந்தர் முனைவர் க.பாஸ்கரன்
தஞ்சைப் பல்கலைக்க்ழக துணை வேந்தர் க.பாஸ்கரன் அவர்கள்
img-20161020-wa0014
தமிழகப் பேராளர்கள்
மியான்மார் பேராளர்கள்
மியான்மார் பேராளர்கள்
மொரிசியஸ் நாட்டுப் பேராளர்
மொரிசியஸ் நாட்டுப் பேராளர்
கல்வித் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள்
கல்வித் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள்
பதிவு
பதிவு
பதிவு
பதிவு
பதிவு
பதிவு

மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பன்னாட்டுத்  தமிழாசிரியர் மாநாடு மலேசியத் தமிழ்க்கல்விக்கு வலிமையும் பெருமையும் சேர்க்கும் என நம்பப்படுகிறது. மாநாடு தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் www.tamilkalvi.my எனும் இணையத் தளத்தில் காணலாம்.