Header Image

அறிமுக விழா

மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுக் கொண்டாட்டத்தின் அறிமுக விழா கடந்த 19.10.2015ஆம் நாள் நடைபெற்றது. கோலாலம்பூர் பத்துமலை மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ம.இ.கா தேசியத் தலைவர் மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ மாட்சீர் காலிட், இந்தியா மற்றும் தெற்கிழக்காசியாவுக்கான கட்டமைப்புச் சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, டத்தோ ஸ்ரீ தேவமணி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் தமிழ்ப்பள்ளிகளோடு தொடர்புடைய சமூகத் தலைவர்கள், தமிழன்பர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் எனப் பல்வேறு தரப்பினர் திரளாகக் கலந்துகொண்டனர். மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் இலச்சினை இவ்விழாவில் அதிகாரப்படியாக அறிமுகம் செய்யப்பட்டது.